முற்று
விசையுடன் சென்ற கல்
நீரின் மேற்பரப்பை கிழித்து
மௌனித்து ஆழமாக ஊடுருவியது
விழுந்து ஊடுருவிய வேகத்தில்
எம்பி குதித்தே -நீரும் அமிழ்ந்தது
அமிழ்ந்த நீரின் அதிர்வுகளை சமன் செய்து
மேற்பரப்பில் விரிந்து பரவியது
ஒவ்வொரு வளையமும் வானமும்
வளையங்கள் தடுப்புகளின்றி
எங்கு முடிவடைந்து செல்கிறதென்று
இலக்கு அறியாது.
கி.சாந்தகுமார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.